First Woman Teacher -Savithri bai Phule
Savithri bai Phule -Life history இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரி பாய் புலே *1800 களில் பெண் கல்வி கற்றால் கணவர் உண்ணும் உணவு புழுவாக மாறிவிடும் என்ற மூடநம்பிக்கைகள் அப்பிக் கிடந்த காலத்தில் பெண் உரிமைக்காக போராடியவர். *சமூகத்த்தில் தாழ்த்தப் பட்டவர்களிலும் தாழ்த்த பட்டவர்களாக பெண்கள் கருதப் பட்ட காலத்தில் தடைகளை உடைத்து பெண்களுக்கு கல்வி புகட்டியவர். *கல்வி என்ற வலிமை வாய்ந்த ஆயுதம் மூலமே மாற்றங்களை கொண்டுவரமுடியும் என்று வாழ்வே சேவையாகி போனவர். * கணவரின் வழிகாட்டுதலுடன் திருமணத்திற்கு பின் அடிப்படை கல்வி முதல் முறையான ஆசிரியர் பயிற்சி வரை கற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் படிப்புடன் தொழிற்பயிற்சி வழங்கியவர். *கல்வியை சமத்துவ கருவியாக்க உயர் தட்டு மக்கள் வீசி எறிந்த மனித மலத்தையும் மலர்களாக நினைத்து சவால்களை சந்தித்த சரித்திர பெண். ...