English reader is an excellent leader

             

ஆங்கிலம் வாசித்தலில்  அசத்தும் அரசுப்பள்ளி தமிழ்வழி மாணவர்கள்

                         English reader is an excellent leader

முன்னுரை :

                          புத்தகம் வாசிப்பவன் மனிதனையே  தொடுபவன். ஆங்கிலம் வாசித்தால் பல நாட்டினரையும் பற்றி  அறிந்து  கொள்ளலாம். அதனால்  தலைச்சிறந்த  தலைவராக முடியும். 2010 ல் ஊ. ஒ. . நி. பள்ளி மாணவர்களைப் பாடப்  புத்தகத்தில் ஒரு  பத்தியைப் படிக்க வைக்க ஒரு வாரம்  தேவைப்பட்டது. அந்நிலையில் அவ்வருடம் கட்டுரையை எழுத  வைக்கவே  முடியவில்லை. தலைமை ஆசிரியர் திரு .மனோகரன் அவர்களிடம்  கலந்துரையாடி, முதலில்  அவர்களுக்கு வாசித்தல்  பயிற்சி தேவைப்படுவதால்  செயலாராய்ச்சி  மேற்கொள்ள அனுமதிப் பெற்றேன். இருப்பினும் அவ்வாண்டில் 8ஆம் வகுப்பில் 13 ல் 3 மாணவர்கள்    ஆங்கில எழுத்துக்களை மட்டும் தெரிந்து  கொண்டு  வெளியேறினர்.  2011 ல் பலரும்  2012ல் ஒருவரும் 2013ல் ஒருவரும் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாததால் மேற்படிப்பை  தொடரவில்லை. ஆனால் இவ்வாண்டு   இப்பள்ளியில் படித்த  மாணவர்களில்  9 பேர் முதலாம்  ஆண்டிலும் 7 பேர் இரண்டாம் ஆண்டிலும் 6 பேர் மூன்றாமாண்டிலும் 13 பேர்  பல கல்லூரிகளிலும் பலர்  தொழிற்பிரிவுகளிலும் இருப்பதற்கு மேற்கொண்ட  முயற்சிகளைப் பற்றி  இக்கட்டுரையின்கண் காண்போம்.

 V. R. Ready to read English  செயலாராய்ச்சி 2010:

                       ஆறாம் வகுப்பில் இருந்த  19 மாணவர்களை  முன் வாசிப்புத்திறனின் அடிப்படையில்  மூன்று  குழுக்களாகப் பிரித்தோம்.

 1.Familiar in basic structural words _11

2.Familiar in Alphabet.                         _5

3.Confused with Alphabet.                __8

          அவர்களை  தினமும் எளிய  செய்கைப் பாடல்கள் மூலம்  ஆர்வ மூட்டினேன்.எளிமையான அடிப்படைச் செயல்பாடுகளை கற்றுக் கொடுத்தேன். எளிய விளையாட்டுகளின்  மூலம்  ஆங்கில  ஆசிரியர்  என்பதனை மறக்க வைத்து  தோழியானேன். தினமும் ஒலிப்புப் பயிற்சிக்கு  முக்கியத்துவம் அளித்து வார்த்தைகளை   சரியாக உச்சரிக்க  வழிகாட்டினேன். காலைப் பிரார்த்தனைக்  கூட்டத்தில் ஆங்கிலத்தில்  நேர்மறைச் சிந்தனையைத் தந்த மனக்கணக்குகளை  கரும்பலகையில்  எழுதிப் போட்டு  படிக்க  வைத்து  விளக்கமளித்தேன். சொல் அகராதியைப் பயன்படுத்த  பயிற்சியளித்தேன். பள்ளி நூலகத்திலுள்ள புத்தகங்களைக் கொடுத்து  வாசிக்க  வைத்தேன். அவ்வப்போது  வாசிப்புப் போட்டியும் நடத்தப் பட்டது. மெல்ல மலரும்  மழலைகளுக்கு  மடிக்கணினியில்  TUX TYPE  பயன்படுத்த உற்சாகமூட்டினேன்.

                  21 நாட்களுக்குப்பின் அவர்களை  கணினி  குழு, மடிக்கணினிக் குழு  என்ற இரு  குழுக்களாக்கி  என்னிடம்  தவறின்றி  5 வரிகள் கொண்டப் பத்தியைப்  படித்துக் காண்பிப்போருக்கு கணினி மற்றும்  மடிக்கணினியில்  எழுத  வாய்ப்பினை  உண்டாக்கினேன். அதனால்  15 பேர்  சுலபமாக வார்த்தைகளைத் தவறின்றி  வாசித்தனர். 4பேர்  எழுத்துக் கூட்டி  வாசித்தனர்.இவர்களில்  ஒரே ஒருவர் மட்டும் 10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வில்  தேர்ச்சிப் பெறாதது  வேதனை  அளிக்கின்றது .மற்ற மாணவர்கள் தங்களுக்கு  ஆங்கிலம் நன்றாக  வாசிக்க  இயலுவதாக  கருத்துத் தெரிவித்தனர்.

 WE ARE READY TO READ ENGLISH  மாற்றம் என்பது  சாத்தியமே  செயல் திட்டம்  2014:

                    6 ஆம் வகுப்பில் இருந்த  7 மாணவர்களையும் 7  மற்றும்  8ஆம் வகுப்புகளில்  உள்ள  மெல்ல  கற்கும்  3+4 மாணவர்களையும்  தேர்ந்தெடுத்து  5 குழுக் களாக்கி  நன்றாக வாசிக்கக் கூடிய மாணவர்கள்   தலைமையின் கீழ் ஏற்பட்ட மாற்றம்  மகத்தானது.

*நாள்தோறும் 8.40-9.30 வரை  ஒலிப்புப் பயிற்சி  அளித்தேன்.

*அடிப்படை  இலக்கணச் சொற்களை உச்சரிப்பதைக் கேட்டு  எழுத வைத்தேன்.

*மாணவர் தலைவர்கள்  உடனுக்குடன் மதிப்பீடு  செய்தனர்.

*அதில் தவறாக எழுதியவற்றை  வாய் வழியில் மீளக்கூற  வைத்தனர்.

*பள்ளி  நூலகத்தில் உள்ள ஆங்கில புத்தகங்களை படிக்க  ஊக்குவித்தோம். .

*அவ்வாறு படித்து முடிப்பவர்களுக்கு  மடிக்கணினியில்  TUX TYPE,CHESS  போன்றவற்றை கொடுத்து உற்சாகப்படுத்தினோம்.

*முன் வகுப்புகளில்  அவர்களை  மட்டம் தட்டிய  ஆசிரியர்கள் முன் படிக்கச் சூழலை உண்டாக்கி  நம்பிக்கையை  வளர்த்தோம்.

*பள்ளிக்கு  வரும் வழியில்  உள்ள  சுவரொட்டிகள், தொங்குப் பலகைகள், வாகனங்களில்  உள்ள  விளம்பரங்கள்  போன்றவற்றைப் படிக்கச் செய்து  தன்னம்பிக்கையை வளர்த்தோம்.

*அருகாமையில்  உள்ள  நடுநிலைப்பள்ளி, இளித்துரைக்கும்  பந்துமை  துவக்கப் பள்ளிக்கும் அழைத்துச் சென்று  சுய மதிப்பீடு  செய்ய  ஊக்குவித்தோம்.

*சுதந்திர தின விழாவில்  அனைத்து  பெற்றோர்கள்  முன் படித்துக் காண்பித்து  பாராட்டைப்  பெற்று  மகிழ்ந்தனர்.

       இதனால் மாணவர்கள் அனைவரும்  இடைநிற்றலின்றி  மேற்படிப்பை  தொடர்ந்துக் கொண்டிருக்கின்றனர். மாணவர்கள் குழுத் தலைவர்கள் சிவரஞ்சினி, நர்மதா ,ஜோதிகா, பிரியதர்சினி  K,  மற்றும்  R. R.  பிரியதர்சினி  இவர்களால் இப்பள்ளிக்கு  தனிப் பெருமை.

ஆங்கில  நாளிதழினை விரும்பிப் படிக்கும்  அரசுப்பள்ளி  தமிழ்வழி  மாணவர்கள் :

                 5 முதல்  8 ஆம் வகுப்பு வரை உள்ள  27 மாணவர்களைக்  கொண்டு  செய்த இச்செயலாராய்ச்சி  மாணவர்கள் தங்களை  தாங்களே  சுயமதிப்பீடு  செய்து கொண்டே  வாசிக்க  வழி வகுத்தது. மாணவர்களுக்கென ஆங்கில செய்தித்தாளினை  வாங்கி  கொடுத்தேன். ஆரம்பத்தில் பலர்  படங்களைப் பார்த்தனர் ;வாசிக்க  யோசித்தனர். ஆகவே அவர்களை தினமும் காலை  8.30 மணி முதல் 9.15 மணி வரை வாசிக்கச் செய்து   பிழையின்றி படிக்கும்  வேகத்திற்கேற்ப 5 குழுக்களாகப் பிரித்து, செய்தித்தாளில்  தங்களுக்கு  இயன்ற  5தலைப்புச் செய்திகளை  படிக்கச் செய்தேன்.

       அதன் பின் அவர்களை    HEADLINE READER, HEADLINE WRITER and PARAGRAPH READER  என்று மூன்று  வகையிலும் வாசிக்கச் செய்து அவர்களாகவே முடித்தவற்றை  Self Assessment Chart ல்  வட்டமிடச் செய்து  ஒவ்வொரு படியாக  வாசிக்க  வாய்ப்புகள்  வழங்கப் பட்டு  வந்தன. முடித்தவர்களுக்கு  பரிசுகள் வழங்கப் பட்டு பிரார்த்தனை  கூட்டத்தில் வாசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கையேட்டிலும்  படித்தவுடன் தங்களால் முடியும்  என்பதற்கென கையொப்பம்  பெறப்பட்டது. எதுவும்  சாத்தியம்  என்பதனை  நிரூபித்தனர். இவர்கள் தான் முதன் முதலாக சுயமாக   ஆங்கிலத்தில் கட்டுரை  எழுதிய மாணவர்கள் !

 * GRAMMAR IS GAME GRAB IT*    செயல் திட்டம் 2018   

5 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 25 பேரைத்  தேர்ந்தெடுத்தோம். ஆரம்ப  காலங்களில்(  2010-12)பாடத்தினைக் குறிப்பிட்ட  நேரத்தில்  முடிக்க இயலாமல்  திண்டாடினோம். ஆங்கில இலக்கணத்தைப் பற்றி பேசக் கூட இயலாத  சூழல்.2013-15  களில்  ஏறக்குறைய உரிய காலத்தில்  பாடங்களை  முடித்தாலும் ஆங்கில இலக்கணத்தைப் பற்றி  கூற புரிந்து கொள்ளும் சூழலில்  மாணவர்கள் இல்லை. 2016 -2017களில்  சற் று  முன்னதாகவே  பாடங்களை  முடிப்பதால் அடிப்படை இலக்கணத்தை பெயரளவில்  கற்பித்து வந்தேன் . இந்நிலையில்  தற்போது  மாணவர்கள்  நன்றாக  வாசிப்பதால்  பிழையின்றி பேசவும் எழுதவும் இலக்கணம்  மிகவும்  அவசியம் என்பதனால் இவ்வாராய்ச்சியில்  2018 ஈடுபட்டோம்.

     ஆகவே 25 பேரை   மாணவர்களின் வாசித்தலின்  வேகத்திற்கேற்ப  4 குழுக்களாகப் பிரித்தேன்.

 NEWS PAPER GROUP -7 பேர்

COMIC BOOK GROUP -6 பேர்

TEXT BOOK GROUP -6பேர்

PHONIC GROUP -6பேர்

   News paper group  மாணவர்கள் தினமும்  10 செய்திகளை  எழுதி வந்து  சரளமாக படித்துக் காண்பித்தனர். பெற்றோர்களும்  அவர்களுக்கு  செய்தித்தாள்களை வாங்கி கொடுத்தும் தொலைக்காட்சியில் ஆங்கில  செய்திச்  சேனலை பார்த்தும்     செய்திகளை எழுத  ஊக்குவித்தனர்.

COMIC BOOK GROUP  மாணவர்கள் தினமும் ஒரு பக்கம்  comic book  லிருந்து  எழுதி  வருவதுடன் என்னிடம் படித்துக் காண்பித்தனர். பெற்றோர்கள் தினமும்  வீட்டில்  எழுதுவதனை  கண்காணித்தனர்.

 TEXT BOOK GROUP  மாணவர்கள் தினம்  ஒரு பக்கம் என பாடப் புத்தகத்தில் இருந்து எழுதி வந்து படித்தனர். பெற்றோர்களும் அதற்கு ஒத்துழைப்புத் தந்து  வந்தனர்.

 PHONIC GROUP  மாணவர்களுக்கு   தொடர்ந்து 21 நாட்கள்  THE SONGS THE LETTERS SING by SND Margaret W. Tarrent   புத்தகத்திலுள்ள  பாடங்களின் மூலம் ஆடிப்பாடி  எளிமையாகவும் ஆர்வத்துடனும்  படிக்க  பயிற்சி  அளித்து வந்தேன்.  News paper group  மாணவர்களும்    ஆளுக்கொருவர் எனத்  தேர்ந்தெடுத்து விடா முயற்சியுடன் பயிற்சி அளித்தனர்.  Seminar முறையில் ஆங்கிலப் பாடங்களைத் தாங்களாகவே கற்றுக் கொள்கின்றனர்.

40 நாட்கள் தொடர்ந்து Anthaksari, Chip  chap choo ,Giving clear instruction, Words in a word, Queen of Sheeba, Secret questions, Star Activity ,Onion ring activity,Coin new words, Word bingo, cross word puzzle, Picture reading, Rhyming tennis, Jigsaw reading, Semantic map, Running dictation, Spot the  difference, Tongue twisters, Introduction with adjectives, Feely bag, Miming, Gestures, Hot seat, Auction game, Fruit salad ,paper folding, Banyard grouping, Riddles, Alphabetical Quiz என விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்று கையாள்கின்றனர்.  

   Best Practices of  BETTATTIவாட்ஸ்  ஆப் குழு  : மேலும்  முன்னாள் மாணவர்கள் சிறு சிறு சிந்தனைத் துணுக்குகளை குழுவில் பதிவு  செய்து  வாசிக்க  வாய்ப்பினை ஏற்படுத்தி  வருகின்றனர்.

கல்வியாளர்களும்  தன்னார்வலர்களும்  எளிய கதைகளை பதிவு  செய்து  நன்னெறியுடன்  வாசித்தலை  வளப் படுத்தி வருகின்றனர்.இத்திட்டத்தினை  செயல்படுத்த ஆங்கில பாடவேளையிலேயே  செய்தாக வேண்டிய  நிர்பந்தத்தினால்  மா ணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள்கல்வியாளர்கள் மற்றும்  தன்னார்வலர்களை  இணைத்து வாட்ஸ் ஆப் குழுவினை உண்டாக்கியது குறிப்பிடத் தக்கது.பெரும் மாற்றத்தை  எதிர்பார்த்துப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

மு டி வு ரை :

           வாசித்தல்  மனிதனை  முழுமையாக்கு ம். வாசிப்பவர் தலைசிறந்த  தலைவர். சுயமாக  கட்டுரைகளை எழுத  வாசித்தல்  மிகவும்  அவசியம். மனவரைப் படங்கள் வரைய படித்துப் புரிதல் தேவை. 2018 ல் தேசிய  திறனறி  தேர்வில்  வெற்றிப் பெற்ற  எம் மாணவர்கள் கேள்வி  தாளினை   தமிழிலும்  ஆங்கிலத்திலும்  படித்து  புரிந்ததனால் வெற்றிப்  பெற முடிந்தது எனக் கூறும் போது  மிகவும்  மகிழ்ச்சியாக இருந்தது. வாசிப்போம் ;நேசிப்போம்.!

 

 

 

 

Comments

Popular posts from this blog

My Identity as a Writing Teacher

Exploratory Action Research 2023