HEALTHY HOMEWORK
வீட்டுப்பாடத்திற்கு
விளக்கமளித்த வாண்டுகள்
முன்னுரை:
வீட்டுப் பாடம் கொடுப்பதன் நோக்கம் மாணவர்களது தன்னம்பிக்கையையும்
எழுத்து திறனையும் வளர்ப்பதாகும்.எழுத்தே நமது எ ண்ணத்திற்கு வரி வடிவம் தரும். அவ்வெழுத்து பிழையினால் நமது கருத்துக்கள் நிராகரிக்கப்
படுகின்றன. அது கேலிக்கு நம்மை உள்ளாக்கும். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட ஏதுவாகவும் உள்ளது. “சொல்வதெழுது தலில் வெற்றியடைய வீட்டுப்
பாடத்துடன் வசீகரமான வார்த்தை
விளையாட்டுக்கள்” 2014-15 ஆம் ஆண்டில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களை கொண்டு ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி, பெட்டட்டியில் செய்த செயல் ஆராய்ச்சியின் விளைவை இக்கட்டுரையின் கண்காண்போம்
.
வீட்டுப்
பாடத்தின் அவசியம் :
எழுத்து திறனை மேம்படுத்த தினந்தோறும் சொல்வதை எழுதுதல் பயிற்சியும் வீட்டில் தொடர்பணியும்
அவசியமானது. அன்றாடம் எழுத்துக்களின்
முறையான உச்சரிப்புடன் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் கற்றால் தான் எழுதுதல்
திறன் மேம்படும் என்பதில் எள்ளளவும்
ஐயமில்லை. குழுவாக இருந்து மேற்கொள்ளும் எழுத்து பயிற்சி மாணவனது
தனித்தன்மையை வெளிக்கொணரும். எழுத்துப்பயிற்சி
போதிய அளவு இருந்தால்தான்
பிழையின்றி எழுத முடியும். அதற்கு வீட்டில் தொடர்பணி அவசியமான ஒன்று. அவ்வீட்டுப் பாடமே
பளுவானால் எழுதுவதையே ஒதுக்கிவிடுவோம். ஆகவே இலகுவான வார்த்தை
விளையாட்டுகள் மாணவனது எழுத்து திறனை மேம்படுத்த இக்காலத்தில் மிகவும் அவசியம்.
9 ஆசிரியர்களிடம் மேற்கொள்ளப் பட்ட கருத்துக்கணிப்பு:
ஆசிரியர்களிடம்
கலந்துரையாடலில் மாணவர்கள் வீட்டுப் பாடமே செய்து வருவதில்லை. அனைத்தும் பள்ளியிலேயே செய்யவிக்க நேரமும் போதுமானதாக
இல்லை என்று வருத்தப் பட்டனர். நாள்தோறும் Dictation வைத்தாலும் அவ்வளவு முன்னேற்றமும் இல்லை. ஆங்கிலத்தில் 18 பேரில் 3 பேர் மட்டும் 9 ஆசிரியர்களாலும் நடத்திய சொல்வதெழுதுதலில் 8/10 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். மற்றவர்கள் 4மதிப்பெண்களுக்கும் குறைவே.ஒரு ஆசிரியர் மட்டும் தொடக்க வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம்
தேவையற்றது என்றார். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை , B.Ed பயிற்சிக்கு வந்த தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை, கணித பட்டதாரி ஆசிரியை, அறிவியல்
பட்டதாரி ஆசிரியை, இரு இடைநிலை ஆசிரியைகள் மற்றும் இரு பெற்றோர் கழக ஆசிரியைகளால் தொடர்ந்து
8 நாட்களுக்கு சொல்வதெழுதுதல் தமிழிலும்
ஆங்கிலத்திலும் நடத்தப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் பாரவையில்
வீட்டுப்பாடம்:
18 பேரில் 4 பேர் மட்டும் பெற்றோர்களின்
கண்டிப்பு,
ஆசிரியர்களிடம் பயம், பிடித்த ஆசிரியர், பிடித்த பாடம் என்பதால் ஓரளவு செய்வதாக கூறினர். மற்றவர்களின் கருத்து என்னை சிந்திக்க வைத்தது.
·
பெற்றோருடன் தொலைக்காட்சி
பார்க்கிறேன்
·
விளையாட்டில்
ஆர்வம்
·
வீட்டில் சண்டை
·
அரட்டை அடிக்க
பிடிக்கும்
·
வீட்டுப்பாடம்
பற்றி கவலை இல்லை
·
பெற்றோருக்கு
உதவி செய்வேன்
·
டீச்சர் கண்டாலே
வெறுப்பு
·
ஆங்கிலமும்
கணக்கும் வீட்டில் சொல்லித் தர யாருமில்லை
·
வீட்டுப்பாடம்
போரடிக்கிறது.
பெற்றோர்களிடம்
திரட்டிய தகவல்:
பள்ளியில் வீட்டுப்பாடம் தருவதில்லை
என்றும் எல்லாம் வேலைகளையும் வகுப்பிலேயே முடித்து
விடுவதாகவும் கூறுகின்றனர். நாங்கள் படித்ததில்லை குழந்தைகள் கூறுவதை தான் நம்புகிறோம் என்றனர் சிலர் . ஒரு சிலர் டிவிக்கு
முன்னால் உட்கார்ந்து எப்போதும் வீட்டுப்பாடம்
தான் எழுதிக் கொண்டே இருப்பான் என்றும் கூறினர்.
நெறிப்படுத்த வீட்டுப்பாடத்தில் மாற்றம் தேவை :
ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் தருகின்றனர்., மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்து வருவதில்லை. பெற்றோர்கள் குழந்தைகள் 6மணி முதல் 10 மணி வரை வீட்டுப்பாடமே செய்கின்றனர் என்று கூறிய கருத்து வேறுபாட்டினாலும்
ஆங்கில ஆசிரியரைதான் மிகவும் பிடிக்கும் என்ற மாணவர்கள் English dictation ல் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும் நெறிப்படுத்தப்பட்ட வீட்டுப்பாடமே தீர்வு என்பதனை
உணர்ந்தோம்.
வீடு வீடாக வீட்டுப்பாடம்:
வகுப்பில் உள்ள மாணவர்களின் பெற்றோர் களில் ஓரளவு படித்த பெற்றோரை, படிக்காத பெற்றோரின் வீட்டுக்கு வரவழைத்து 18 மாணவர் களையும் வாரம் ஒரு வீடாக கண்காணிக்க
அன்புடன் கேட்டுக் கொண்டேன்.
18 வாரங்கள் பெற்றோர்களும் இணையாக
செயல் புரிந்தனர். அது வரையில்
வீட்டுப் பாடம் செய்வதாக கூறிக் கொண்டு பெற்றோருக்கு அஞ்சிப் புத்தகத்தை இரவு 10 மணி வரை திறந்து வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்த
வாண்டுகள் 5 மணி முதல் 6 மணி வரை வீட்டுப் பாடங்களை முடித்து சந்தோசமாக பொழுதை
கழித்தனர்.
வழிகாட்டி ஆசிரியரின் பங்களிப்பு :
1.பள்ளியில் தினம் ஒரு பாடலால் நிறைய
வார்த்தைகளை கற்கத் தூண்டினேன்.
2.தினம் ஒரு வார்த்தை
விளையாட்டு
3.தினமும் எழுத்துக்களின் உச்சரிப்பினை
சைகை மூலம் பயிற்சி அளித்தேன்.
4.தினமும் 10 தமிழ் சொற்களை சொல்லக் கேட்டு எழுத வைத்தேன்.
5.தினமும் 10 ஆங்கில வார்த்தைகளை Dictation ஆக கொடுத்து அதற்கான பொருளை வீட்டுப் பாடமாக எழுதி
வரக் கூறினேன்.
6.பெற்றோரின்
வழிகாட்டுதலுக்கேற்ற வீட்டுப்பாடத்தினை எளிய செயல்திட்டங்களாக வழங்கினோம்.
7.வாரத்தில் ஒரு நாள் மாணவர்களுடன் வீட்டுப் பாட நிகழ்வில் கலந்து கொண்டு
பெற்றோர்களுடன் மாணவர்களின் தனித்திறன்
பற்றி உறவாடினேன்.
HOMEWORK( Half Of My Energy Wasted On Random
Knowledge )
பெற்றோர்கள் களைப்பாக வந்த மாணவர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கி
மகிழ்ந்தனர்.
மாணவர்களும் தாங்களாகவே வருகைப் பதிவேடு
தயாரித்து அனைவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகினர்.
முடிவுரை :
ஆரம்பத்தில் சிறிய வார்த்தைகள்
எழுத திணறிய சிறுவர்கள் தற்போது
வாக்கியங்களை முழுமைப்படுத்துகின்றனர்.
வலுவூட்டலின் மூலம் எழுத்து பிழைக்கு ஓர் நல்ல தீர்வு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் எழுத்து பிழையின்றி எழுதுகின்றனர். மாணவர்களிடையே தன்னம்பிக்கையும் எழுத்து திறமையும் வளர்ந்துள்ளது. எழுதுவதிலிருந்த சோம்பேறித்தனம் விலகியது. பெற்றோர் மாணவர் உறவு பலப்படுத்தப்பட்டது. குடும்ப உறவுகளின் அர்த்தம் புரிந்தனர். மாணவர்களுக்கு வீட்டுப் பாடத்தினைத் தாண்டி சுயமாக சிந்திக்க நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு உதவ மாணவர்கள் உறுதிப் பூண்டுள்ளனர். வீட்டுப்பாடம் செய்து முடிப்பதால் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுகின்றனர்.
சரியான வழிகாட்டுதலும்
பயிற்சியும் பெற்றால் எந்த ஒரு பிரச்சினைக்கும் நல்லதொரு தீர்வை எட்டி விட முடியும் என்பது திண்ணம்.
“No more torture in the
name of Homework.”
Comments
Post a Comment