My journey as an ITK Volunteer
இல்லம் தேடி கல்வி மையம் சோகத்தொரை 1.தன்னார்வலரின் பெயர்:- த. புஷ்பா 2.அடையாள எண்:- 136 3.மைய எண் 331102076 ITK Volunteer Entrance Exam at BRC Coonoor on December 16th 2021 My journey as an ITK volunteer இல்லம் தேடி கல்வி மையம் சோகத்தொரையில் 18 உயர்தொடக்க நிலை மாணவர்களுடன் 20 .12. 2021 அன்று வகுப்பு ஊ.ஒ.ந.நி.பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.சுமதி அவர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது. மாணவர்களை நாள்தோறும் மையத்திற்கு வரவழைக்கவே ஆரம்பத்தில் ஆடல் பாடல்கள் உடன் ஆங்கில செயல்பாடுகளை தொடர்ந்து வழங்கினேன். இல்லம் தேடிக்கல்வியின் அவசியத்தைப் பற்றி ஜனவரி 14ல் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் அறிய மாணவர்கள் செய்த அறிவியல் செயல்பாடுகள் மற்றும் கலை கைவேலைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தினேன். மாணவர்களது செயல்பாடுகளை அனைவரும் வியந்து பாராட்டினர். பிப்ரவரி மாதம் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை வார்த்தைகள...