My journey as an ITK Volunteer
இல்லம் தேடி கல்வி மையம் சோகத்தொரை
1.தன்னார்வலரின் பெயர்:- த. புஷ்பா
2.அடையாள எண்:- 136
இல்லம் தேடி கல்வி மையம் சோகத்தொரையில் 18 உயர்தொடக்க நிலை மாணவர்களுடன் 20 .12. 2021 அன்று வகுப்பு ஊ.ஒ.ந.நி.பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.சுமதி அவர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
இவ்வாண்டில் தொடக்க வகுப்புகள் பிற தனியார் பள்ளிகளில் படித்த எங்களது ஊர் மாணவர்கள் 12 பேர் ஊ.ஒ.ந.நி.பள்ளி, சோகத்தொரையில்
1.தன்னார்வலரின் பெயர்:- த. புஷ்பா
2.அடையாள எண்:- 136
3.மைய எண் 331102076
இல்லம் தேடி கல்வி மையம் சோகத்தொரையில் 18 உயர்தொடக்க நிலை மாணவர்களுடன் 20 .12. 2021 அன்று வகுப்பு ஊ.ஒ.ந.நி.பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.சுமதி அவர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
மாணவர்களை நாள்தோறும் மையத்திற்கு வரவழைக்கவே ஆரம்பத்தில் ஆடல் பாடல்கள் உடன் ஆங்கில செயல்பாடுகளை தொடர்ந்து வழங்கினேன். இல்லம் தேடிக்கல்வியின் அவசியத்தைப் பற்றி ஜனவரி 14ல் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் அறிய மாணவர்கள் செய்த அறிவியல் செயல்பாடுகள் மற்றும் கலை கைவேலைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தினேன். மாணவர்களது செயல்பாடுகளை அனைவரும் வியந்து பாராட்டினர்.
பிப்ரவரி மாதம் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை வார்த்தைகளுக்கான சொல்வது எழுதுதல் பயிற்சியும் எளிய அடிப்படை கணக்குகளையும் வழங்கி தரம் பிரித்து மாணவர்களே ஒருவருக்கு ஒருவர் உதவவே அனைவரும் அடிப்படைத் திறனை பெற்றனர்.
மார்ச்* மாதம் நூலகம் மற்றும் பள்ளி நூலகத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்றும் நூலகப் புத்தகங்களை வழங்கியும் 27.3. 2022 அன்று கதை கூறுதல் போட்டி ஊர் மக்கள் முன் நடத்த மாணவர்களது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கதை கூறும் பாங்கினை கண்டு உற்சாகப்படுத்தினர். அவர்களது கதைகளை நானும் எனது youtube சேனலில் பதிவேற்றியுள்ளேன்.
ஏப்ரல் மாதத்தில் யோகா பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஊர்த் தலைவர் முன் மாணவர்கள் நேர்த்தியாக செய்யவே அவர்களது பாராட்டையும் பரிசினையும் பெற்று மகிழ்ந்தனர்.
உலகப் புத்தக தின விழாவை ஒட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி விழா சிறப்புற கொண்டாடினோம்.
மே மாதம் சதுரங்க விளையாட்டு பயிற்சிகள் முன்னாள் மாணவர்கள் ஒத்துழைப்புடன் வழங்கியதோடு கோடை விடுமுறையில் கையெழுத்துப் போட்டி, வாசிப்பு போட்டி என நடத்தி மாணவர்களை ஊக்குவித்தோம்.
ஜூன் மாதம் முதல் 16 மாணவர்கள் தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு டிஜிட்டல் டிக்டேஷன் நோட் வழங்கி சொல்வதை கேட்டு எழுத பயிற்சி அளித்து வந்தேன்.
ஆகஸ்ட் 15ல் மாணவர்கள் திருப்பூர் குமரன், ஜான்சி ராணி, பகத்சிங் என வேடமணிந்து அனைவரது நன்மதிப்பைப் பெற்றனர். பள்ளி திறந்ததும் வீட்டுப் பாடச் சுமையால் மாணவர்களது வருகை குறையவே 23. 8 .2022 அன்று வீடு வீடாகச் சென்று செய்தித்தாள் வாசிக்கச் செய்து இல்லம் தேடிக் கல்வியின் அவசியத்தை உணர்த்தவே அனைவரும் தொடர்ந்து வருகை புரிகின்றனர்.
நவம்பர் மாதம் டிக்சனரி ரீடிங் பயிற்சி அளித்தோம்.மாணவர்களுக்கு ஆங்கில அகராதியை பயன்படுத்துதல் சார்ந்த போட்டி கவா அறக்கட்டளையின் திரு.சுப்ரமணி ஐயா அவர்கள் நடத்தினார்.
இதில் பிரணவ் வர்ஷன்,சுலக்ஷா மற்றும் கர்ணா ஆகியோர் முறையே ரூ.10000,ரூ.5000,ரூ.3000 என முதல் மூன்று இடங்களை பிடித்து பரிசுகளை பெற்றனர்.
டிசம்பர் மாதம் மாணவர்களை அரையாண்டு தேர்வுக்கு தயார் படுத்தினோம்.
ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதங்களில் கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஏன் தயங்குகின்றனர் என்ற தலைப்பில் செயலாராய்ச்சி மேற்கொண்டேன்.ஆரம்ப காலத்தில் 20 நொடிகள் பேச திணறிய மாணவர்கள் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆரம்பித்தனர்.சக மாணவர்களுடனும் சகஜமாக ஆங்கிலத்தில் உரையாட தொடங்கியது இச்செயல் ஆராய்ச்சியின் வெற்றியே.
மார்ச் மாதம் ITK மூலம் வழங்கப்பட்ட அனைத்து கட்டகங்களையும் மீள நினைவு கூர்ந்தோம்.
ஏப்ரல் மாதம் எளிய அறிவியல் சோதனைகளை செய்ய ஊக்குவித்தோம்.முழு ஆண்டுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மே மாதம் 8 ஆம் தேதி அனைவரும் வியக்கும் வண்ணம் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா வானவில் மன்ற அம்பாசிடர்கள் மூலம் கொண்டாடினோம்.
எல்லா நாட்களிலும் எனக்கு பெரும் துணையாக இருக்கும் தொடக்க நிலை தன்னார்வலர் இரா.பிரியா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாத மாதம் நடைபெறும் போட்டிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் அனைத்து கல்வியாளர்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் நன்றி கூறுவதில் பெருமிதம் அடைகிறேன்.
அவ்வப்போது மையங்களை பார்வையிட்டு வழி நடத்தும் கல்வி அதிகாரிகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மனமார்ந்த நன்றிகள்.
சேர்ந்துள்ளனர்.ஆகவே இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான பொறுப்புகளும் கூடியுள்ளது.தரமான இலவச கல்வியை அனைவரும் பெறும் வரை அயராது உழைப்போம்.
அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆன எனக்கும் இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய நம் தமிழக அரசுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
த.புஷ்பா ,
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
சோகத்தொரை,
குன்னூர்,
நீலகிரி.






Super puspha mam. Excellent job.
ReplyDeleteGreat pushpa miss Congrats தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.
ReplyDeleteYou are always rocking star 🌟 Sisy. Great job.
ReplyDeleteSuper, congratulations mam, you serve and you deserve, good job
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeleteஇல்லம் தேடி கல்வி மூலம். பல இல்லங்களில் கல்வி என்ற ஒளியை ஏற்றுகிறீர்கள்
வாழ்த்துக்கள்
You are a jewel of ur writings ma🥰
ReplyDeleteTeacher, we are very proud of you. May the Almighty shower his blessings to continue your noble service for the betterment of students community.
ReplyDeleteReally You had a wonderful experience with student as a friend and philosopher more than a teacher. Every Teacher should treat a student as his own children. We can see you are doing that and Baba says all the teachers are doing my duty.
ReplyDeleteCongratulations for your great efforts
ReplyDelete