மறக்க முடியாத மாணவர்கள்

      மறக்க முடியாத மாணவர்கள்


ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு உபச்சார விழா

ஆசிரியர்:- உங்களது இந்த எட்டு வருடத்தில் நம் பள்ளியில் உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்கள் மற்றும் நம் பள்ளியில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் என்ன என்று கூறினால் எங்களாலும் பள்ளியில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வர இயலும்.

மாணவர் 1: நம் பள்ளிக்கு பெற்றோர்கள் எக்காரணம் கொண்டும் குடித்துவிட்டு உள்ளே வரவே கூடாது. No உடனே வந்தால் என்னை போன்ற மாணவர்களை குழுவாக மாணவர்களால் ஏளனம் செய்வதிலிருந்து காப்பாற்ற முடியும். டீச்சர்ஸ் ப்ளீஸ் பாட வேளையில் எங்களுடனே இருந்து விடுங்கள்.

மாணவி:-எனக்கு இந்தப் பள்ளியில் உங்களை மிகவும் பிடிக்கும். 

(நோட்டு புத்தகத்திலிருந்து காய்ந்த  ரோஜா இதழ் மற்றும் சாக்லேட் கவர் எடுத்து காண்பிக்கிறார்.)

ஆம், டீச்சர் நீங்கள் இந்த பள்ளிக்கு முதல் நாள் வரும்போது தலைமை ஆசிரியர் உங்களை அறிமுகம் செய்ய சொன்னார். நீங்கள் அறிமுகம் செய்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வரும்பொழுது தலையிலிருந்து ரோஜா பூவின் இதழ் கீழே விழுந்தது. அதனை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்கு அடுத்த மாதம் உங்களது பிறந்த நாளில் எங்களுக்கு கடலை மிட்டாய் தந்தீர்கள். அதன் கவர் தான் இது. உங்களை பிடித்ததால் தான் என்னவோ இந்த மூன்று வருடமாக எனக்கு இந்த உலகமே பிடித்து விட்டது. பிற்காலத்தில் உங்களைப்போல் அன்பாசிரியராக வருவேன், டீச்சர்.



திருமதி.த.புஷ்பா,

ஆங்கில பட்டதாரி ஆசிரியர்,

ஊ.ஒ.ந.நி.பள்ளி,

சோகத்தொரை,

குன்னூர்,

நீலகிரி 

9488774349

Comments

Popular posts from this blog

My Identity as a Writing Teacher

Exploratory Action Research 2023