வீர மங்கை வீணா


               

வீரமங்கை வீணா

ஆறாம் வகுப்பிற்குள் ஆசிரியர் நுழைகிறார். மாணவர்கள் வணக்கம் சொல்லிவிட்டு அமர்கின்றனர். முதல் நாள் என்பதால் ஒவ்வொருவரும் அவர்களை அறிமுகப்படுத்தினர். வீணா என்றதும் அனைவரும் அவள் பெயர் வீணா போன வீணா என்றார்கள்.ஏன் என்று கேட்டபோது அவருடைய  முந்தைய வகுப்பு ஆசிரியர் அவரை அப்படித்தான் கூப்பிடுவார் என்று அனைவரும் கூறினர். மேலும் மாணவர்களும்  அவளை அப்படியே அழைக்கின்றனர் என்று அவள் கூறியதை கேட்டவுடன் ஆசிரியரது மனதிற்கு மிகவும் வலியாக இருந்தது.

உண்மை தான் ஆறாம் வகுப்பில் அவளால் தமிழில் சில வார்த்தைகள் , ஆங்கிலத்தில் எழுத்துக்கள் கணிதத்தில் இரண்டிலக்க கூடுதல் மட்டுமே அவளுக்கு தெரிந்திருந்தது. அவ்வாசிரியர்  அந்த ஊரில் இல்லம் தேடிக் கல்வி மையத்தின் தன்னார்வலர் என்பதால் அவளுடைய குடும்பச் சூழ்நிலை தான் அதற்கு முக்கிய காரணமாக இருந்ததை முழுவதுமாக அறிந்து கொண்டார்.


 ஆசிரியர் அவளிடம் அழைத்து கவலைப்படாதே! உனக்கு ஒரு  நல்ல வாய்ப்பு கிடைக்கும். உன்னிடம் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கூறி நாள்தோறும் அடிப்படையான எழுத்துக்களையும் ஆங்கிலச் சொற்களையும் எளிய கணித செயல்பாடுகளையும் தொடர்ந்து கற்பித்து வந்தார்.


 இந்நிலையில் அவ்வாண்டின் சுதந்திர தின விழா நாள் நெருங்கியது. அப்பொழுது ஆசிரியர் வீணாவை அழைத்து உன் பெயரை வீரமங்கை வீணவாக மாற்ற விரும்புகிறேன். உன்னால் வீரப் பெண் ஜான்சி ராணி போல் வேடமிட்டு பேச இயலுமா என்றார்.வேடம்  போட்டுக்குவேன் டீச்சர் ஆனால் எனக்கு பேச பயமாக இருக்கிறது என்றாள். கவலைப்படாதே! நீ தினமும் என் வீட்டிற்கு வா உனக்கு உரிய பயிற்சி தருகிறேன். உன்னால் கண்டிப்பாக பேச முடியும் என்றார். தொடர்ந்து 10 நாட்கள் பள்ளி நேரம் முடிந்த பிறகு  வீட்டிற்கு சென்றாள். நாள்தோறும் அந்த பேச்சை எழுதிக் கொடுத்து அவளுக்கு எழுத்துக்கள் மட்டும் தெரிந்திருந்தால் வார்த்தைகளை சலனமாக உச்சரிப்பதற்கு சிரமப்பட்டாள்.அதனை திரும்பத் திரும்ப கூற வைத்துப் பயிற்சி அளித்ததன் காரணமாக வசனத்தை சிறப்பாக மனனம் செய்து கொண்டாள். அதனை ஆகஸ்ட் 15 அன்று அனைவரின் முன்னாள் மிகுந்த உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் கூறினாள். அனைவரும் அவளை பாராட்டினர். அன்று முதல் அவள் வீரமங்கை வீணாவாக வலம் வருகிறாள்.

 இன்று பள்ளியில் மற்ற மாணவர்களோடு சகஜமாக பழகுகிறாள். அவர்களைப் போல படிக்கவும் ஆரம்பித்து விட்டாள்.கணிதத்தில் நான்கு அடிப்படை செயல்பாடுகளை எளிதாக செய்கிறாள்.வகுப்பில் கூட்டல், கழித்தல் மற்றும் பெருக்கல் கணக்குகள் செய்ய சிரமப் படும் குழந்தைகளுக்கு எளிய முறையில் சொல்லிக் கொடுக்கிறாள்.தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்து மிகவும் அழகாக எழுதுகிறாள்.கலை நிகழ்ச்சிகளில் முன்னின்று வழிகாட்டுகிறாள்.

கலைத் திருவிழா மற்றும் புத்தகக் கண்காட்சி கல்விக் கண் திறந்த காமராஜர் பற்றிய பாடலைப் பாடி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

கலைத் திருவிழாவில் பாடல்

திருமதி த.புஷ்பா,

ஆங்கில பட்டதாரி ஆசிரியர்,

ஊ.ஒ.ந.நி.பள்ளி,

சோகத்தொரை,

குன்னூர்,

நீலகிரி

9488774349


Comments

  1. சூப்ப்ப்பர்
    வீணா மற்றம் ஆசிரியருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Identity as a Writing Teacher

Exploratory Action Research 2023