மதுவில்லா கிராமம்
மதுவினால் ஏற்படும் தீமைகள்
முன்னுரை:
'வீட்டுக்கு வீடு வாசப்படி' என்பது பழமொழி.இப்பொழுது வீட்டுக்கு வீடு பாட்டில் மூடி.பெரும்பான்மையான குடும்பங்கள் நலிந்து போவதற்கு காரணம் குடிப்பழக்கம்.சம்பாதனை இல்லாமல் சாப்பிடுவதே ஒரு குற்றமான இந்தக் காலத்தில் அந்த சாப்பிட்டுக்கு முன்பும் பின்பும் சாராயம் வேண்டியிருக்கிறது நம் குடிமக்களுக்கு. அத்தகைய மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி இக்கட்டுரையின் கண் காண்போம்.
மதியை மழுங்கடிக்கும் மது:
முன்பு ஊர்த் திருவிழா காலங்களில் மட்டுமே இருந்து வந்த இந்தப் பழக்கம் இப்பொழுது திருமணங்களிலும் மற்ற சிற்சில விசேஷ நாட்களிலும் நடைமுறையாகி விட்டது.
'குழந்தை பிறந்து பெயர் சூட்டினாலும் பாட்டில்;
கிழவர் இறந்து நோன்பு வைத்தாலும் பாட்டில்'.
மதுவினால் ஏற்படும் தீமைகள்:
மது அருந்துவதால் முக்கிய உறுப்புகளான இரைப்பை,கல்லீரல் இதயம், மூளை நரம்புகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இரைப்பையில் கேஸ்ட்ரைஸ் என்ற புண் ஏற்பட்டு வயிற்று வலி, வாந்தி ஏற்படும். ரத்த வாந்தி ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும். இதயத்தில் உள்ள தசைகள் பாதிக்கப்பட்டு இதயம் சுருங்கி விரியும் தன்மையை இழந்து விடும். இதனால் உயிர் வாழ்வது கேள்விக்குறியாகிவிடும். சிரோசிஸ் நோய் ஏற்பட்டு கல்லீரல் சுருங்கி செயலிழந்து போகும். இதனால் மூளை மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழக்க நேரிடும். கணையம் அழுகி விடுவதால் உணவு செரிமானம் பாதிக்கப்படும். வைட்டமின் பற்றாக்குறைக் காரணமாக நியூட்ரையட்டிஸ் எனப்படும் நரம்பு வீக்க நோய் ஏற்படும். மூளை பாதிக்கப்படும். இதனால் கை, கால்களில் வலி, மதமதப்பு ஏற்படும் .ஒருவித மறதி நோய்க்கு ஆளாகி இறுதியில் மனநோயாளியாக மாறும் ஆபத்தும் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக குடிப்பழக்கம் ஒருவருடைய கௌரவம் சமூகத்தில் உள்ள மரியாதை போன்றவற்றை கெடுத்து 'குடிகாரன்' என்ற பட்டத்தை வழங்கிவிடும்; சமுதாயத்தில் இருந்து ஒதுக்கிவிடும். கணவன் மனைவி உறவில் விரிசல், வறுமை, அமைதியின்மை என அத்தனை தீமைகளையும் கொண்டு வரும். குழந்தைகள் கல்வி தடைப்பட்டு எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிடும். சாராயம் எந்த அளவுக்கு வயிற்றை அரிக்கிறதோ அதற்கு மேலாக சொத்து சுகங்களையும் அழிக்கிறது.
முடிவுரை:
ஒவ்வொரு குடிக்காரனையும் திருத்துவது முடியாத காரியம். ஆனால் ஒவ்வொரு சாராய வியாபாரியையும் தடுப்பது நம்மால் முடியும். ஒவ்வொரு கிராமமும் துணிந்து நின்றால் அக்கம் பக்கத்தில் உள்ள மதுக் கடைகளை அகற்ற முடியும். இந்த ஒரு செயல் நாம் நமது தலைமுறைக்கு மட்டுமல்லாமல் நமது குழந்தைகளுக்கும் நமது அடுத்த தலைமுறைக்கும் செய்யும் உபகாரமாக இருக்கும். ஆம்,
மதுவை ஒழிப்போம்!
மாதிரி கிராமமாக மாற்றுவோம்!!
Wonderful message mam
ReplyDeleteSuper mam. Nice deed. Fabulous initiation.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteExcellent efforts mam. Keep rocking
ReplyDeleteசமூகத்தின் மீது அக்கறை கொண்ட அற்புதமான படைப்பு. இந்த அக்கறை. எல்லோருக்கும் வந்து விடாது சகோதரி. பாராட்டத்தக்க செயல். இன்னும் நிறைய செய்ங்க சகோதரி 💐💐💐
ReplyDeleteமதுவை ஒழிப்போம்
ReplyDeleteகிராமத்தை காப்பாற்றுவோம்!
மதுவில்லா கிராமம்.
கட்டுரை மிக நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள். புஷ்பா ஆசிரியை அவர்களுக்கு 🙏🙏🙏👏👏👏👌👌👍