என்னைச் செதுக்கிய நூல்
என்னை ச் செதுக்கிய நூல்
முன்னுரை:-
உலகில் இறவாத பொருள் புத்தகங்களே.புத்தகங்களை தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான். "ஊர் செல்லக் காட்டும் வழிபோல் வாழ்வுக்கு நேர்பாதை சொல்வதே நூல்" என்னும் சாமி.சிதம்பரனாரின் கூற்றிற்கிணங்க என்னை நேர்வழிப்படுத்தி செதுக்கிய நூலான "YOU CAN WIN "என்னும் நூலைப் பற்றி இக்கட்டுரையின் கண் கூற நான் பெரிதும் விழைகிறேன்.
என்னை செதுக்கிய நூலைப் பற்றிய ஓர் அறிமுகம்:-
என்னை செதுக்கிய YOU CAN WIN என்னும் நூலின் ஆசிரியர் Shiv Khera .இந்நூல் 1998 ல் வெளியிடப்பட்டு 2002 ல் மறு அச்சு செய்தது.மொத்தம் 290 பக்கங்களையும் 11 தலைப்புகளையும் ,ஒவ்வொரு பகுதி முடிந்ததும் பயிற்சியினையும் உள்ளடக்கியது.2002ல் 5,00,000 பிரதிகள் விற்பனையாகி உள்ளது. இந்த நூலின் அட்டை வாசகமே நம்மை வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டும்.அதாவது, "Winners don't do different things. They do things differently." என்பதே அவ்வாசகம்.இந்த நூல் ஆங்கில மொழியில் இருந்தாலும் படிப்பதற்கு எளிமையாகவும் ஊக்குவிப்பதாகவும் உள்ளது.
என்னைப் போன்று வாழ்வில் படிப்படியாக முன்னேற விரும்புபவர்களுக்கு ஓர் சிறந்த வழிகாட்டி நூலாகும். இந்நூல் நமது மனக்குழப்பத்திற்கு விடிவு தந்து நன்மதிப்புகளை தரவல்லது. நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்ள செயல் திட்டப் பயிற்சிகள் உதவுகின்றன.நேர்முகச் சிந்தனை, நடத்தை, குறிக்கோள்கள்,செயல்கள் எனப் பகுக்கப்பட்டு சிகரத்தின் உச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
YOU CAN WIN -என்னைச் செதுக்கிய விதம்:-
எப்போதும் புத்தகத்தை விரும்பி படிக்கும் என்னை சுய மதிப்பீடு செய்துக் கொண்டே படிக்க Action plan என்னும் எளிய பயிற்சிகள் கொண்ட முதன் முதலாக நான் படித்தப் புத்தகம் இதுதான்.தனியாகப் படிக்காமல் படித்ததை வாழ்க்கைத் துணைவரிடமும் சகோதர ,சகோதரிகளிடமும் நண்பர்களிடமும் கலந்தாலோசித்து விளக்கம் பெற உதவிய நூலும் இது தான்.
நான் எதை சாதிக்க
விரும்புகிறேன்;எப்பொழுது அந்தச் சாதனையை அடைவேன்; அதற்கான வழிமுறைகள் என்ன? என உள்ளார்ந்த வினாக்களை எழுப்பி என் வாழ்நாளை சரி வழியில் செலுத்தச் செயல் திட்டத்தை உருவாக்கித் தந்ததும் இந்நூல் தான்.
"Most people fail not because of lack of ability and intelligence but because of lack of desire, direction, and discipline."என்னும் வரிகள் என்னையும் எனது தலைமுறை யினரையும் சீர்படுத்தி க் கொண்டே வருகின்றன.
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிந்த நூல்:-
நூலின் ஆரம்பித்திலேயே உள்ள பலூன்காரனும் சிறுமியும் கதையில், பலூன்காரர் பல நிறங்களில் பலூன் களைப் பறக்கவிட அந்தச் சிறுமி இந்த கருப்பு நிற பலூன் பறக்குமா?என்று கேட்ட கேள்விக்கு பலூன்காரர் பலூன் உயர பறப்பது நிறத்தை பொருத்து அல்ல; அதற்குள் உள்ள காற்றுத் தான் எனக் கூறியதைப் படித்த நாள் முதல் நான் சற்று உயரமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற என்னுடைய தாழ்வு மனப்பான்மையை நீக்கி என்னுள் உள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்தால் எட்டாத உயரத்தையும் எட்டி விடலாம் என்ற தன்னம்பிக்கையைத் தந்தது சிவ் கேராவின் You can win.
வாய்ப்புகளை வரவேற்க வழிவகுத்த நூல்:-
Acres of diamonds என்னும் கதையில் மன திருப்தியுடனும்
சந்தோஷத்துடனும் வாழ்ந்து வந்த ஒரு விவசாயி ஒரு அறிவாளியின் பேராசை ஊட்டிய வார்த்தைகளால் வைரத்தைத் தேடி ஊர் ஊராக அலைந்து மன நிம்மதியை தொலைத்துக் கொண்டிருக்க ,அதே அறிவாளி அந்த விவசாயியின் நிலத்திலேயே வைரத்தை காண்பித்ததில் இருந்து வாய்ப்புகளைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லை;ஆனால் நம்மைத் தேடி வரும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடக் கூடாது என்று முடிவெடுக்க வழி வகுத்த நூல் You can win.
மக்களே மிகப்பெரிய சொத்து என்பதனை புரிய வைத்த நூல்:-
Where the vision is one year;
Cultivate flowers;
Where the vision is ten years;
Cultivate trees;
Where the vision is eternity;
Cultivate people.
என்று ஆசிரியர் குறிப்பிட்டதனை புரியாமல் புரிந்ததனாலோ என்னவோ என்னுடன் வருபவர்கள் உன்னோடு வந்தால் நீ பொறுமையாக நிறைய பேரிடம் பேசுகிறாய்.எனக்கு நேரமில்லை ஓடிவிடுகிறேன் என்று பலரும் ,உன்னைப் போலவே நானும் பலரிடம் நலம் விசாரிக்க கற்று வருகிறேன் என்று சிலரும் கூறிக்கொண்டு என்றும் என்னுடைய நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஆகவே எந்நாளும் ஒரு சிறிய புன்முறுவல் ,சிறிதான அன்பான ஆதரவான வார்த்தைகளால் என்னால் இயன்றளவு எனது நட்பு வட்டாரத்தை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்க முடிகிறது.
நேர்முகச் சிந்தனையை நேர்த்தியாக வளர்த்த நூல்:-
நடத்தையை நிர்ணயிக்கும் காரணிகளான Environment, Experience, Education என்னும் 3E's ஐ தினமும் நானே Evaluate செய்ய வழி வகுத்த நூல். நேர்முக நடத்தையினால் எல்லா நிலையிலும் பலரால் பாராட்டப்பட்டு வந்து கொண்டிருக்கிறேன்.
காலத்தின் அருமையை காட்டிய நூல்:-
Life is not a dress rehearsal என்பதனை படித்தது முதல் எந்த ஒரு செயலையும் நாளை,நாளை என்று ஒத்திகை பார்க்காமல் அன்றன்றே முடிக்க வேண்டும் என்ற பண்பினை என்னுள் ஊறவைத்த நூலும் இது தான்.
"Our bodies need good food every day;
Our minds need good thoughts every day."
என்பதனை கோடாரியை தினமும் Sharp செய்தால் தான் நல்ல உற்பத்தியை பெருக்கி அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்பதனை விளக்கக் கதை மூலம் எடுத்துரைத்த விதம் அருமையாக இருந்தது.
Fritz Kreisler என்னும் வயலின் வித்துவானிடம் மக்கள் எப்படி உங்களால் மட்டும் பிரம்மாதமாக வாசிக்க முடிகிறது? நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலியா? என்று கேட்டதற்கு அவர் பதிலளித்த விதம் நானும் என்னுடைய ஆசிரியப் பணி சிறக்க சனி, ஞாயிறு, விடுமுறை என்று பார்க்காமல் தினமும் பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாக திறவுகோலாக இருந்தது.அவர் கூறிய பதில் யாதெனில் "வெற்றிக்குக் காரணம் இடைவிடாத பயிற்சி. ஒரு மாதம் நீ பயிற்சி செய்யாவிட்டால் ரசிகர்கள் வித்தியாசத்தை கூறுவர்; ஒரு வாரம் பயிற்சி செய்யாவிட்டால் உன்னுடைய வாழ்க்கைத் துணைவர் வித்தியாசத்தைக் கூறுவார்;
ஒரு நாள் பயிற்சி செய்யாவிட்டால் நீயே வித்தியாசத்தை கூறுவாய்" என்பது தான். இதனால் தொடர் விடா முயற்சியும் முறையான பயிற்சியும் சரியான நேரத்தில் செய்தால் சாதிக்கலாம் என்று கற்றேன்.
கடின உழைப்பை கௌரவித்த நூல்:-
உலக மக்களில் இரு பிரிவினர். கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள்.Takers eat well; Givers sleep well என்பதனால் நிம்மதியாக உறங்க என் உடலாலும் மனதாலும் இயன்றளவு கொடுத்து மகிழ்ந்து வருகிறேன்.
ஓர் அழகான பாடும் பறவை. ஒரு நாள் ஒரு பெட்டியில் மண்புழுக்களைக் கொண்டு வந்த விவசாயியை வழிமறித்து பெட்டியைப் பற்றி விசாரிக்க ,அந்த விவசாயி அந்த மண்புழுக்களைச் சந்தையில் விற்று அழகான இறகுகளை வாங்கி வரப்போவதாக கூறினார். சுலபமாக உண்ண விரும்பிய பாடும் பறவை ,அது தன்னுடைய இறகை தினம் ஒன்றாக தருவதாக மண்புழுக்களைக் கொண்டு வர விவசாயியைப் பணித்தது.இதனால் தினம் ஒரு இறகாக இழந்து அழகினையும் இழந்து பாடவும் முடியாமல் இறந்து போன சோகக் கதையை அறிந்த நாள் முதல் சுலபமாக எதனையும் அடைய விரும்பாமல் கடினப்பட்டு உழைத்தால் கவலையின்றி வாழலாம் என்பதனை உணர்ந்தேன்.
துன்பங்களினால் துவளாமல் தலைதூக்கி நடக்க தத்துவங்களைத் தந்த நூல்:-
ஒரு நாள் அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்க ஒரு மூலையில் ஒரு பட்டுப்புழு கக்கூனிலிருந்து வெளியே வருவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டச் சிறுவன் வலைகளை விலக்கி பட்டுப்புழுவை வெளியேக் கொண்டுவர, பட்டுப்புழு இறந்துவிடுவதைக் கண்டு கண்கலங்கி ஏங்கிய சிறுவனுக்கு ஆசிரியர் கக்கூனிலிருந்து பல இன்னல்களை விடுவித்து தான் பட்டுப்புழு அழகிய வண்ணத்துப் பூச்சியாக உருவெடுத்து பறக்கின்றது என்பதனை கூறியதிலிருந்து துன்பங்களைச் சந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்பதனை எளிய நிகழ்வு மூலம் விளக்கிய ஆசிரியருக்கு வீர வணக்கங்கள்.
If you want to succeed, double your failure rate என்னும் Tom Watson ன் வார்த்தை களுக்குச் சான்றாக விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், Triode tube ஐக் கண்டறிந்த லீ.டீ.ஃ பாரஸ்ட், Cartoonist வால்ட் டிஸ்னி, கார் தயாரிப்பில் சாதனைப் படைக்கும் ஹென்றி ஃ போர்ட்,அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன்,இசைஞானி பித்தோவான் ஆகியோரது வாழ்க்கை சம்பவங்களிலிருந்து கூறிய விதம் எவ்வளவு தோல்வியையும் சந்திப்போம் எனும் மனோதிடத்தை வழங்கியது.
ஒரு இளைஞன் சாக்ரடீஸிடம் வெற்றிக்கான ரகசியத்தைக் கேட்க ,அவர் அவனை அடுத்த நாள் நதிக்கரைக்கு வரச்சொல்லி அவனைத் தண்ணீரில் தள்ளி, தத்தளிக்க வைத்து ,தூக்கிவிட்டு இவ்வாறு துன்பத்தில் தத்தளித்தால்தான் வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற வெறி வரும்; வெற்றியும் கிட்டும் எனக் கூறியது. நான் சந்தித்து வரும் துன்பங்கள் நல்லதொரு வெற்றிக்கு வித்திடும் என்ற நம்பிக்கையைத் தந்தது.
மேலும் Turn Scars into Stars என்பதனை சிறந்த இசைக்கு வித்திட்ட காதுக் கேளாத பித்தோவான் ,இயற்கையை ரசித்த கண்பார்வை அற்ற மில்டன், சக்கர நாற்காலியில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்த அமெரிக்க பிரதிநிதியான ரூஸ்வோல்ட்,1960 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வேகமாக ஓடி சாதனைச் செய்த கால் முடமான வில்மா ருடால்ப் போன்றோரின் வாழ்க்கையை ஆசிரியர் எடுத்துக் காட்டிய விதம் நானும் வாழ்க்கையில் துன்பங்களால் துவண்டு போகாமல் ஏதேனும் சாதித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தை உசிப்பி விட்டது.
வாழ்க்கை வாழ் அர்த்தங்களுக்கு வழி காட்டிய நூல்:-
Intellectual education influences the head and
Value-based education influences the heart
என்பதால் பட்டத்திற்காக வருடாவருடம் படித்தாலும் தினமும் 5 நிமிடமாவது நன்னெறிக் கல்வி புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற கொள்கையை வளர்த்த நூல்.
ஒரு மனிதன் தலைநிமிர்ந்து நடக்க தேவையான 5 C's Character, Commitment, Conviction, Courtesy, Courage ஐக் கையாள கற்று வித்ததும் இந்த நூல்.
ஒரு ஹோட்டலுக்கு ஒரு சிறிய பையன் தன்னிடமுள்ள 50 ரூபாயை எடுத்துச் செல்கிறான்.ஐஸ்காரரிடம் அந்த ஐஸ், இந்த ஐஸ் என்று விசாரித்து 45 ரூபாய்க்கு ஐஸ் வாங்க அந்த Server கடுப்பு அடைகிறான். அச்சிறுவன் வெளியேறிய பின்பு tips ஆக 5 ரூபாயைத் தட்டுக்கு அடியில் வைத்துச் சென்றுள்ளதை பார்த்துக் கண் கலங்குகிறான் Server. இதிலிருந்து வரவுக்கு ஏற்றச் செலவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் நம்மை கவனிப்பவர்க்கு மனம் கோணாமல் சன்மானமும் வழங்க வேண்டும் என்பதனை எளிமையாக ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.
A fool speaks without thinking
A wise man thinks before speaking
என்று படித்த நாள் முதல் ஒவ்வொரு வார்த்தையையும் பேசுவதற்கு முன்பே நன்கு யோசித்துப் பேசக் கற்றுக் கொண்டேன்.
An open ear is the only believable sign of heart என்னும் David Augsburger ன் வாக்கிற்கிணங்க எதுவாக இருந்தாலும் கேட்க வேண்டும் என்று முடிவு எடுத்து Best Listener என்ற பெயரையும் பெற்றேன்.
People who gossip with you will also gossip about you in your absence என்பதால் புறம் பேசுவதை தவிர்த்து வருகிறேன்.
"Resolve to be tender with the young,
Compassionate with the aged,
Sympathetic to the striving and
Tolerant of the weak and strong.
Because sometimes our lives would have been all of these ourselves."
Lloyd Shearer ன் வார்த்தைகளுக்கு இணங்கி எல்லோரிடமும் நல்லுறவுடன் நட்பு பாராட்டி நல்ல மனிதனாக வாழ முயற்சி செய்து கொண்டு வருகிறேன்.
"Study as if you were to live forever;
Live as if you were to die tomorrow"
என்னும் தேசப்பிதா காந்தியடிகளாரின் வாக்கியங்கள் இந்நூலில் இடம்பெற்று என் வாழ்விற்கு வெளிச்சம் காட்டி வருகின்றன.
முடிவுரை:-
இவ்வாறாக ஒரே நூலில் பல சாதனையாளர்களின் மேலான கூற்றுகளையும் ஆழமான மேற்கோள்களையும் பல சரித்திர நாயகர்களின் வாழ்நாள் சாதனைகளையும் சிந்திக்கத் தூண்டும் கற்பனை மற்றும் உண்மைக் கதைகளையும் ஒருமித்துப் படித்தால் என்னைப் போல் பலரையும் இந்த நூல் செதுக்கிவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
"பிறர் எழுதியுள்ள புத்தகங்களைக் கொண்டு உங்களைத் திருத்திக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள் ;பிறர் வருத்தி உழைத்ததைக் கொண்டு நீங்கள் பெறக் கூடிய பயன் இது" எனும் சாக்ரடீஸின் கூற்றிற்கிணங்க இது போன்ற அரிய பல நல்ல நூல்களைத் தேடிப் படிப்போம்!
என்னைச் செதுக்கிய YOU CAN WIN -ஆசிரியர் SHIV KHERA விற்கு I CAN WIN என்ற ஆழமான அவசியமான அர்த்தமுள்ள பதிலை அர்ப்பணிக்கிறேன்.
த.புஷ்பா,
பட்டதாரி ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
சோகத்தொரை,
குன்னூர்,
நீலகிரி
dpushpa761@gmail.com
Your blog gives a wonderful idea abput the book. The moment I finished reading your precise description about what the book has...I have madebit a point to read it asap. Thankyou for the introduction about this book. Please keep introducing books like these...all the best
ReplyDeleteYes without desire, direction, discipline people may fail .....I like this ma....your writings open a new way to move forward 👌✍️
ReplyDeleteYou are always great dear Pushpa sister. I hope you are doing great 👍job. I wish you all success in your career and life. God bless you 🙏
ReplyDeleteI always inspiring your views.vaazhga valamudan.
ReplyDeleteI am Inspired u
ReplyDeleteநவில் தொறும் .நூல் நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு
ReplyDeleteமிகவும் சிறப்பு.
ReplyDeleteவாழ்த்துகள் தோழி.
நல்ல நூல் 100 நண்பர்களுக்கு சமம்.. ஆம்...அது உங்கள் வாழ்வில் உறுதியானது!
ReplyDeleteநல்ல நூல் 100 நண்பர்களுக்குச் சமம். ஆம் அது தங்கள் வாழ்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ReplyDeleteஅருமையான பதிவு சகோதரி மேடம் வாழ்த்துக்கள்.புத்தகம் தான் நம்மைச் செதுக்கும் உண்மை . அந்த புத்தகத்தை நான் படித்த பின்னர் உங்களுக்கு பதில் அனுப்புகிறேன் சகோதரி 🎉🎉🎉🎉🎉
ReplyDeleteYour words are very motivating to read books mam. Keep going and cultivate people as this book said. Happy to hear from you.
ReplyDeleteGood message my friend
ReplyDeleteKeep going Teacher
Wonderful reading today Thahk you pusba Madam
Yes... Winners don't do different things, they do the things differently. Exactly like you mam.
ReplyDeleteஉங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் புதுமையிலும் புதுமை. பிறருக்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்.
ReplyDeleteGood effort. Keep going.
ReplyDeleteYou suggested me a good book ..keep rocking with your wonderful performance ..
ReplyDeleteசிறப்பான கருத்துக்கள் 💐💐
ReplyDeleteசிறப்பான பதிவு.
ReplyDeleteSuperb Mam. A great zeal in your heart. God bless you
ReplyDeleteSuper mam, conngrats
ReplyDeleteTeacher, Though I read this book few years ago, but your way of explaining about this book is more inspiring than by the book itself. As rightly said, more than learning from a book, implementing the learning is the greatest gift that we can give to the author. Keep publishing such reviews on great books.
ReplyDeleteMy suggestion:
ReplyDeleteKindly read the book " Power of Now " by Eckhart tolle.
I assure you,
It will take you to a new scale..
Sure Sir
Delete