Dinamalar Ambitious Teacher 2014
இலட்சிய ஆசிரியர் 2014 முன்னுரை :- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெட்டட்டி ,குன்னூரில் அண்ணாநகர், அம்பேத்கார் நகர், சுங்கம் போன்ற காலனி பகுதிகளிலிருந்து 1936 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருந்தும் இன்றளவு வரை ஒரு பட்டதாரி வெளிவரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு காரணம் அவர்களுடைய சமூக, பொருளாதார, பண்பாடு, கலாச்சார பின்தங்கிய நிலையே. 23.08.2001 இல் அரசு பணியில் சேர்ந்த எனக்கு 10 .06. 2010 முதல் இப்பள்ளியில் பணிபுரிய வாய்ப்பு கிட்டியது. தற்போது இச்சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கட்டுரையின் கண் காண்போம். நல்லொழுக்கத்தினால் தன்னம்பிக்கையை வளர்த்திட்ட மாணவர்கள்:- சீருடையே மாணவனின் சின்னம் என்பதால் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த திரு எஸ் மனோகரன் அவர்களின் அனுமதியின் பேரில் சீருடை சரிவர அணியாத சிறுவர்களை காலை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முன்பே வீட்டிற்கு அனுப்பி வரவே இன்று எங்கள் பள்ளியில் வாரம் மூன்று விதமான சீருடைகளை அணிகின்றனர் காலணியே இல்லாமல் இருந்தவர்கள் காலணி ...