My letter to Government school children
அன்புள்ள மாணவனுக்கு,
உன் வாழ்வின் மீது அக்கறை உள்ள அன்பு
ஆசிரியர் புஷ்பா எழுதுவது. காலையில் தினமும் அம்மா, அப்பாவை பாதம் பணிந்து பள்ளிக்கு வா என்ற போது
எந்த அம்மா, அப்பாவை என்று நீ கேட்டது என்னை புரட்டியது.
இன்று விறுவிறுப்பான தகவல் தொழில் நுட்ப உலகில் அன்பை இழந்து நீ
படும்பாடு எனக்கு புரிகிறது. உன்னுடன் பேச நேரம் ஒதுக்காமல் தொலைக்காட்சி முன்
செலவழிக்கும் பெற்றோர், செல்பேசியில் மூழ்கியிருக்கும் உடன் பிறப்புகள், உறவினை துச்சம் என மதிக்கும் சொந்தக் காரர்கள்
மத்தியில் உன்னை பார்த்து என்ன பாவம் செய்தாயோ என்று நினைத்தாலும் உன் அன்பினால்
அவர்களை வசப்படுத்த இயலும் என்று நம்புகிறேன்.
படி
! படி !என்று வாட்டும் பெற்றோர் படிப்பதற்கு வசதியை ஏற்படுத்தி தர முன்வருவதில்லை.
'படிப்பதே இல்லை 'என்று வசைப்பாடும் ஆசிரியர் உனக்கு அடிப்படை என்ன தேவை என்று
அறிய விரும்புவதில்லை. 'இவனுக்கு படிப்பே வராது ' என்று பலர் முன் ஏளனம் செய்யும்
சக மாணவர்கள் உனக்கு உதவ முன் வருவதில்லை. இருப்பினும் உன்னுள் சாதிக்க
முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் கைவிட்டு விடாதே!
எப்போதும் நீ கைபேசியுடன் தான் இருக்கின்றாய் என்று கூறுவோர் ஒருவரும் உன்னோடு விளையாட வருவதில்லை. உன் வேதனை புரிகிறது. நீயும் விளையாட்டோடு கைபேசியை நிறுத்தாமல் உன் வாழ்க்கைக்கான வெற்றி பாதையை தேடு.
ஒரே வீட்டில் தனியார் பள்ளியில் படிக்கும் சகோதரனுக்கு தனி கவனம். உனக்கு பராமரிப்பே இல்லை மனம் வதங்கினேன். கவலைப்படாதே நீ உனக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொள்ளும் தனித்துவம் பெறுவாய். தனியார் பள்ளி மாணவனை நம்பி பெற்றோர் வாழ்கின்றனர். அரசு பள்ளி மாணவன் தன்னை நம்பி வாழ்கிறான்.
போனவருடம்
வரை படிக்க வைத்த ஆசிரியருக்கு வணக்கம் சொல்லாமல்
நீ போவது சரியில்லை தான். என்ன
செய்ய 3 வருடம் ஒரே ஆசிரியரிடம் படித்த உனக்கு சலிப்பு தான். 45 நிமிட பாடத்தை
வருடம் ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்று சலிப்பில்லாமல் கற்ற ஆசிரியர்கள் 3 வருடம் ஒரே ஆசிரியரிடம் நீ
படிப்பதன் சலிப்பினை எப்போது கல்வித்துறைக்கு எடுத்தரைப்பார்களோ என்று நீ ஏங்குவதை
யாரிடம் கூறுவது புரியாமல் நிற்கிறேன்.
கிராம
பள்ளியில் நிம்மதியாக உறங்கி
9.00 மணிக்கு நடந்து வந்து மதியம் சுட சுட வென சத்துணவை சாப்பிட்டு சரளமாக
அனைவரிடமும் கள்ளங்கபடமின்றி பேசும் நீ காலந்தோறும் இப்படியே சந்தோசமாக
இருக்க வேண்டும் என்று இறைவனை என்றென்றும் இறைஞ்சுகிறேன்.
தனியார் பள்ளிக்கு மாணவர்களை
அனுப்பிவிட்டு அவர்கள் இன்னும் வரவில்லை என்று தவிக்கும் பெற்றோர் மத்தியில் சீக்கிரமாக வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு உதவி
செய்ய காத்திருக்கும் உன் குணம் வாழ்க்கையில் வாழ அர்த்தம்
கற்பிக்கிறது.
ஐந்தாம்
வகுப்பு வரை தமிழ்மொழி வழியில் படித்து ஆங்கிலத்தில் புரியாமல் நீ படித்து விட்டு 8 ஆம் வகுப்பிற்கு வந்தும் 9 ஆம் வகுப்பில்
மீண்டும் தமிழ் மீடியம் சேர துடிப்பதை நன்மையா? தீமையா? என்று எடுத்து உரைக்க முடியாமல் தவிக்கிறேன். உனக்கு
பிடித்ததை செய்.ஏனெனில் இது உன் வாழ்க்கை. சமூக அந்தஸ்து, ஆங்கில மோகத்திற்கு உன்னை பலி காடாக்கி உன் சுய சிந்தனையை மழுங்கடிக்க செய்த சமூகத்திற்கு உன் திறமையால் நல்வழிக்காட்டு.
என்றும் நம்மை கைவிடாத கை *தன்னம்பிக்கை ** தன்னம்பிக்கையுடன் வாழ் !வெற்றி உனதே !!
My dear students -Yours ever loving teacher Pushpa
உன் வெற்றியை கொண்டாட விரும்பும் அன்பு ஆசிரியர் த. புஷ்பா.
அழகான எதார்த்த உண்மைகள்.....உன் வாழ்க்கை உன் கையில் என்பதை உணர்த்த செய்வோம்
ReplyDeleteSure mam
Deleteதொடக்க கல்வித்துறையில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஓர் ஆசிரியர் பணியமர்த்தப்பட்டால் கல்வித்தரம் மிகச் சிறப்பாக மாறும் ...
ReplyDeleteWhen I was reading this , I could remember my childhood and my beloved teacher Somiya. Last week I told her I am the living example of your service of making lives. But I said I have to go miles with your blessings mam.
ReplyDeleteYou are such a great teacher. Really your children are so lucky. Go ahead on your selfless service mam with my prayerful wishes.
Congratulations to Somiya mam. I am so proud of you.
Delete