Posts

Showing posts from November, 2023

My letter to Government school children

Image
My dear Government school Child- Ever loving teacher Pushpa அன்புள்ள மாணவனுக்கு, உன் வாழ்வின் மீது அக்கறை உள்ள அன்பு ஆசிரியர் புஷ்பா எழுதுவது. காலையில் தினமும் அம்மா,  அப்பாவை பாதம் பணிந்து பள்ளிக்கு வா என்ற போது எந்த அம்மா, அப்பாவை என்று நீ கேட்டது என்னை புரட்டியது.   இன்று விறுவிறுப்பான தகவல் தொழில் நுட்ப உலகில் அன்பை இழந்து நீ படும்பாடு எனக்கு புரிகிறது. உன்னுடன் பேச நேரம் ஒதுக்காமல் தொலைக்காட்சி முன் செலவழிக்கும் பெற்றோர், செல்பேசியில் மூழ்கியிருக்கும் உடன் பிறப்புகள்,  உறவினை துச்சம் என மதிக்கும் சொந்தக் காரர்கள் மத்தியில் உன்னை பார்த்து என்ன பாவம் செய்தாயோ என்று நினைத்தாலும் உன் அன்பினால் அவர்களை வசப்படுத்த இயலும் என்று நம்புகிறேன்.   படி ! படி !என்று வாட்டும் பெற்றோர் படிப்பதற்கு வசதியை ஏற்படுத்தி தர முன்வருவதில்லை. 'படிப்பதே இல்லை 'என்று வசைப்பாடும் ஆசிரியர் உனக்கு அடிப்படை என்ன தேவை என்று அறிய விரும்புவதில்லை. 'இவனுக்கு படிப்பே வராது ' என்று பலர் முன் ஏளனம் செய்யும் சக மாணவர்கள் உனக்கு உதவ முன் வருவதில்லை. இருப்பினும் உன்னுள் சா திக்க முட...